கிளிநொச்சி பிரமந்தனாறுக்குளத்தில் தந்தையுடன் மீன்பிடிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மரணம்

கிளிநொச்சி பிரமந்தனாறுக் குளத்தில் மீன்பிடிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை தந்தையுடன் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் படகு புரண்டதில் நீரில் மூழ்கியுள்ளார்.

இந்தநிலையில் தந்தை மற்றும் கிராம மக்களால் குறித்த இளைஞன் மீட்கப்பட்டு தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், மரணமடைந்த நிலையிலையே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நீரில் மூழ்கி இறந்த இளைஞன் மயில்வாகனபுரம், புன்னைநிராவியைச் சேர்ந்த உதயகுமார் குமரன் (19 வயது) எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவரது சடலம் மரண விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like