கிளிநொச்சி மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட 7.6 சதுரகிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்ற வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களிலும் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பகுதிகளில் தற்போது வெடிபொருள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 579 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் வெடிப்பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கிளாலி, முகமாலை, இத்தாவில் போன்ற பகுதிகளில் 7.6 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்ற வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like