முல்லைத்தீவு மூன்று முறிப்பு கிராமத்தில் அதிகரித்து வரும் காட்டுயானைகளின் தாக்கம்

முல்லைத்தீவு மாந்தை கிழக்குப்பிரதேசத்தின் மூன்று முறிப்பு கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து வருவதோடு தமது பயிர்ச்செய்கைகளையும் அவை அழித்து வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மூன்று முறிப்பு கிராமத்திற்குள் நுழைந்த காட்டுயானைகள் பெருமளவான தென்னைமரங்களை அழித்துள்ளன.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு, மூன்று முறிப்பு, வீரப்பிராயன்குளம், இளமருதன்குளம், மருதன்குளம் ஆகிய பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது.

அத்துடன் ஊருக்குள் புகும் காட்டுயானைகள் பெறுமதி வாய்ந்த பயன்தரு மரங்களையும் பயிர் செய்கைகளையும் அழித்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like