வவுனியாவில் அரச ஊழியர்கள் பற்றாக்குறை

வவுனியா மாவட்டத்தில் அரச ஊழியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக மாவட்டச் செயலாளர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதனால், அரச பணிகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், வவுனியா மாவட்டத்தில் 102 கிராம சேவர்கள் தேவைப்பட்ட ​போதிலும் தற்போது 62 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

அதனால் தற்போது கிராம அதிகாரிகளை தெரிவு செய்வதற்கான பரீட்சை நடத்தப்பட்டுள்ளதுடன், விரைவில் அவ்வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், தொழில்நுட்ப அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள், சமுர்த்தி முகாமையாளர்கள் பதவிகளிலும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

மாவட்டத்தில் தொழில்நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறையினால் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை சரிவர நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like