சிறுமிகள் மூவர் துஸ்பிரயோகம்! அடையாள அணிவகுப்பில் எவரையும் அடையாளம் காட்டாத சிறுமிகள்

மூதூர், பெரியவெளிக் கிராமத்தில் எட்டு வயதுடைய மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அடையாள அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 35 பேர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆயினும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் எவரையும் அடையாளம் காட்டவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் ஒத்திவைத்தார்.

மேலும், இந்த வன்புணர்வுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் மூதூர் தெற்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு பாடசாலைகளை பூட்டி கோஷங்களையும் எழுப்பினர்.

இதேவேளை கடந்த 28ஆம் திகதியில் இருந்து தமிழ் பிரதேசங்களில் பல இடங்களில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் நீதியான பக்கச்சார்பற்ற விசாரணையை நிலைநாட்டக்கோரி பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் சேர்ந்து பல்வேறுபட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like