பொலிஸ் வேலை கோரி போராட்டம் நடத்தும் யாழ் இளைஞன்

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றி, வேலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்த ஒருவர் தனக்கு மீண்டும் பொலிஸ் வேலை வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நபர் யாழ் கச்சேரிக்கு முன்பாக இன்று மாலை இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.

அத்துடன், அச்சுவேலியை சேர்ந்த பிரதீபன் என்பவரே தனக்கு பொலிஸ் நிலையத்தில் வேலைவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்

மேலும் அவ்வாறு வேலை தராவிட்டால் தான் தீக்குளிப்பேன் எனவும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு அவர் மீது பல்வேறு குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், பொலிஸ் உத்தியோகஸ்தர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like