ஞானசார தேரரை தேடி பொலிஸார் வலை வீச்சு.!

கைது செய்வதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக ஞானசார தேரர் சிகிச்சைப் பெறுவதாக நம்பப்படும் மூன்று இடங்களிலும் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு சோதனைகளை நடத்தியுள்ளது.

எனினும் இதன்போது ஞானசார தேரர் அங்கு இருக்கவில்லை என உயர் மட்ட பொலிஸ் தகவல்கள் கேசரிக்கு தெரிவித்தன.

You might also like