வடக்கில் வறட்சியால் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கில் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக 33 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊர்காவற்துறை, மரதன்கேணி, காரைநகர், சங்கிலிப்பாய், சங்கத்தானை மற்றும் வேலனை ஆகிய பிரதேசங்கள் வறட்சியால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

அந்த பிரதேங்களின் மக்களுக்கு தேவையான குடிநீர், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் புங்குடுதீவு மற்றும் மண்டைதீவு ஆகிய பிரதேச மக்கள் தமக்கான நீரை வேண்டி பல நாட்கள் வீதியில் காத்து கிடந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்

You might also like