அடிப்படை வசதிகளின்றி சிரமங்களை எதிர்நோக்கும் முல்லைத்தீவு மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை பிரதேச கிழக்கு பாலைப்பாணி, கொம்புவைத்த குளம் பகுதி மக்கள் தமக்கான அடிப்படை வசதிகள் கிடைக்காமையினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பிரதேச மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு 17.5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பனங்காமம் சென்றோ அல்லது 16.5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள துணுக்காய் மாங்குளம், வீதியின் மூன்று முறிப்பு சந்திக்கு சென்றோ அதில் இருந்து போக்குவரத்தினைப்பெற்று மாங்குளத்திற்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.

தமது கிராமங்களுக்கான மின்சார வசதி மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் எவையும் இல்லாத நிலை காணப்படுவதுடன் இரவு வேளைகளில் காட்டுயானைகளின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும், மேலும் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் குறித்த பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like