கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டவர்களின் புள்ளி விபரம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 43,720 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 945 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அண்மையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மேற்படி 43,720 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 945 பேர் மீள்குடியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கரைச்சிப் பிரதேசத்தில் 24,082 குடும்பங்களும், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 6948 குடும்பங்களும், பூநகரி பிரதேசத்தில் 6948 குடும்பங்களும் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 3937 குடும்பங்களும் மீள்குடியேறியுள்ளதாக குறித்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்கள் கடந்த 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி முதல் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மீள்குடியேறியுள்ளனர் என குறித்த புள்ளிவிபர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like