வவுனியா மாவட்ட மட்ட தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி

வவுனியா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி இம்மாதம் 30.06.2017 அன்று வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இதற்கான ஆரம்ப கூட்டம் இன்று 06.06.2017 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விளையாட்டு உத்தியோகத்தர்கள் , சமூகசேவை உத்தியோகத்தர்கள் , அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ,உயிரிழை , டேடா அமைப்பு என்பன கலந்து கொண்டன. மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு. தேவராசா அமலன் விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற்கு வேண்டிய முழுமையான ஆதரவை தாம் வழங்குவதாகவும் வவுனியா மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டுத்திறனை முன்னெடுப்பதற்கு ஒரு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு அபிவிருத்தி குழுவைத் தெரிவு செய்யவேண்டும் எனவும் கேட்டிருந்தார் .

இந்ந முறை முன்னேற்பாடாக திட்டமிட்டு இந்தப்போட்டியை நடாத்த இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, எனவும் குறிப்பிட்டார் .விளையாட்டு உத்தியோகத்தர்கள் கரப்பந்தாட்ப்பயிற்சியாளர் திரு.எஸ். திலீபன் கபடிப்பயிற்சியாளர் திரு.எஸ்.வசிகரன் வவுனியா பிரதேச செயலக விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் திரு.ரி.விந்துஜன் ஆகியோரும் தமது உத்தியோகத்தர்கள் அனைவரது ஒத்துழைப்பினைப் பெற்று மாவட்ட விளையாட்டுப்போட்டியை வெற்றிகரமாக முடித்துத் தருவதாகக் கூறினர் .

சமூகசேவை உத்தியோகர்களான திருமதி பி. விமலேந்திரன் நெடுங்கேணி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் வரோட் நிறுவனம் மூலம் வீரர்களை அடையாளம் காண உதவமுடியும் எனத்தெரிவித்தார் .

வெட்டிகுள பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் திருமதி ந.நந்தினி தம்மிடம் பாரிய அமைப்பு எதுவும் இல்லை எனினும் உகந்தசன் போன்ற வீரர்கள் மூலம் ஏனையோரை அடையாளம் காணமுடியும் எனவும் ஓகான் நிறுவனம் தமக்கான உதவியை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார் .

வவுனியா தெற்கு பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் திரு என் .பாலகுமார் தமக்கு சிங்கள மொழியில் விண்ணப்பபடிவம் தேவை என்பதை சுட்டிக்காட்டினார் . வவுனியா நகர பிரதேசசெயலக சமூகசேவை உத்தியோகத்தர் செல்வி எஸ் .சோபனாவும் நிகழ்வில் கலந்து கொண்டார் .

ஓகான் நிறுவன பிரதிநிதி திரு. திவாகர் தமிழ் மாற்றுத்திறனாளிகள் எனப்பெயரிடுவது தொடர்பில் தனக்கு மாற்றுக்கருத்துள்ளதாக தெரிவித்தார் .எனினும் இது ஒரு ஆற்றுப்படுத்துகை மட்டுமே . வருங்காலங்களில் இந்தப்பெயரில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனவும் எல்லா இன மக்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளமுடியும் எனவும் டேடா அமைப்பின் திரு. நிவாஸ் கருத்து வெளியிட்டார் .

சீட் நிறுவனம் சார்பில் திரு. சந்துரு தாம் விளையாட்டுப்போட்டியில் பூரண ஆதரவு வழங்க இருப்பதாகவும் வரோட் நிறுவன பிரதிநிதி திரு. விக்ரர் தமது மாணவர்கள் பயணாளிகளை இதில் ஈடுபடுத்த இருப்பதையும் குறிப்பிட்டார் . மேலும் வெளடி அமைப்பின் உஸாந்தினி அகில இலங்கை செவிப்புலனற்றோர் அமைப்பின் கணநாதன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர் .

உயிரிழை அமைப்பின் செயலாளர் திரு. இ.இருதயராஜ் இப்போட்டியை அனைவரும் இணைந்து சிறப்பாக நடாத்தி முடிக்க உதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருமதி கலா திருமதி ஜீவசாந்தி திருமதி கோமளா ஆகியோரும் கலந்து கொண்டனர் . இறுதியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு அபிவிருத்தி குழு தெரிவ செய்யப்பட்டது.

நன்றியுரையை அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கி.வசந்தரூபன் வழங்கினார் .

You might also like