முல்லைத்தீவை சேர்ந்த முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுக்கையிலுள்ள 16 பேருக்கு சக்கர நாற்காலிகள்

போரினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுக்கையிலுள்ள 16 பேருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிவைக்கப்பட்டன.

வடக்கு மாகாண சகாதார அமைச்சனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நடமாடும் மருத்துவ சேவையில் பயன்பெறும் பயனாளிகள் 16 பேருக்கு இந்த சக்கர நாற்காலிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நடமாடும் மருத்துவ சேவையில் 175ற்கு மேற்பட்டவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதே போன்ற நடமாடும்மருத்துவ சேவைகள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் வடக்கு சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மோட்டிவேசன் லங்கா நிறுவனம் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஆகியவற்றின் நிதிபங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்ட சக்ரநாற்காலிகள் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாங்குளம் உயிரிழை நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட மோட்டிவேசன்லங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் முகுந்தன்இ நடமாடும் மருத்துவ சேவை பணியாளர்கள் தர்சன், கஜானா, சோபிகா உட்பட உயிரிழை நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெயகாந்தன் உட்பட பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

You might also like