வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் முதியோர் விழிப்புணர்வு போட்டிக்கான ஏற்பாடு!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் முதியோர் விழிப்புணர்வு தொடர்பான போட்டிகளை நடாத்துவதற்கான ஆரம்ப வைபவம் இன்று (06.06.2017) செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு பாடசாலை மைதானத்தில் கல்லூரி முதல்வர் தா.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்பு அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய முதியோர் செயலகம் மூலம் மாணவர்கள் மத்தியில் ‘நாளைய முதியோர் இன்றைய இளையோர்’ என்ற தொனிப்பொருளில் கவிதை , கட்டுரை , ஓவியம் , சிறுகதை போன்ற ஆக்கங்களை , கருத்துகளை பெற்று முதியோர் தொடர்பான விழிப்புணர்வு செயல்திட்டங்களை மேற்கொள்வதற்காக போட்டிகளை நடாத்தவுள்ளனர்.

இந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் விபுலானந்தா கல்லூரியும் வவுனியா தமிழ் மகாவித்தியாலயமும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி தனுசியா பாலேந்திரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன், மாவட்ட செயலக சமூகசேவை உத்தியோகத்தர் கே.இராஜசேகர், திரு.பாலேந்திரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் போட்டிகள் தொடர்பான விளக்கத்தையும் விதிமுறைகளையும் போட்டிகளில் மாணவர்கள் பங்கு கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்து விளக்கினார்.

முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தரால் சுமார் 200 போட்டிக்கான கையேடுகளை கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இன்று பாடசாலையில் சூழல் விழிப்புணர்வு பேச்சு மற்றும் சிறுவர் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கான போட்டிக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் என்பன இடம்பெற்றன.

இதன்படி இந்நிகழ்வுகளை தமிழருவி த.சிவகுமாரன் தொகுத்து வழங்கினார். ஒவ்வொரு பாடசாலையிலும் தலா 10 முதல் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கான பரிசில்களை மாவட்ட சமூக சேவை அலுவலகம் வழங்க ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

You might also like