வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுஸ்டிப்பு

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையில் உலக சுற்றுச் சூழல் தினம் இன்று (06.06.2017) காலை 8.30மணியளவில் பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தலமையில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக உயிரியல் பிரிவு தலைவர் அனந்தினி நந்தகுமார் , சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட சுற்றாடல் ஆலோசகர் இ.மாதவன், களக்கற்கை நிலைய முகாமையாளர் அ.ஜெய்கீசன், சுற்றாடல் உத்தியோகத்தர் விஜயகுமார் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம், விழிப்புணர்வு நாடகங்கள், பேச்சு, சுற்றாடல் உறுதி மொழி என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாகாணக் கல்வி பணிப்பாளரினதும் கல்வி அமைச்சினதும் 15.05.2017ம் திகதி சுற்று நிருபத்தின் செயற்படுத்தப்படும் வகையில் அமைந்த வேலைத்திட்டமானது இப் பாடசாலையில் 2017ம் ஆண்டு தைமாதத்திலிருந்து வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது..

குறிப்பாக பயிற்சிக் கொப்பிகள், புத்தகங்கள், அலுவலக ஆவணங்கள், ஆசிரியர் பதிவேடுகள், இடாப்புக்கள் என்பற்றிற்கும் துணியுடனான உறையிடல் முறை , திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளில் பிளாஸ்ரிக் பொருட்களின் மீள் பாவனை, வீட்டுத்தோட்டம், அழகுபடுத்தல் செயற்பாடுகள் போன்றவையும் இப் பாடசாலையில் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like