மாணவர்கள் மூவருடன் தகாத உறவு! ஐவர் கைது! மூவர் தப்பியோட்டம்!

பாடசாலை மாணவர்கள் மூவரை தகாத உறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 5 நபர்கள்ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியைச் சேர்ந்த 5 நபர்களே  திங்கட்கிழமை(05.06) ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 ல் கல்வி பயிலும் மாணவர்கள்மூவரையும் 8 நபர்கள் ஒரு அப்பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்குஅழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி தகாத உறவுக்குட்படுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களும் ஊர்காவற்துறை பொலிஸாருக்குதெரியப்படுத்திய வேளையில் பொலிஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற வேளையில் 3நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

ஏனைய ஜவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் மருத்துவபரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like