கிளிநொச்சியில் வடமாகாண ஊடக பயிற்சி வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் வடமாகாண ஊடக பயிற்சி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த பயிற்சி வேலைத்திட்டம் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தின் பொது மண்டபத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உத்தியோகத்தர் சிவராசாவின் தலைமையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.

இந்த வேலைத்திட்டமானது தொடர்ந்து நாளை மாலை வரை நடைபெற உள்ளதுடன், பிரதம விருந்தினராக கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் திருலோகமூர்த்தியும், வளவாளர்களாக ஏ.எம்.ஜெசீம் மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண இளம் ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like