செத்த பிணங்கள் எங்களை பார்த்து விசமிகள் என்று கூறுவதா? வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இன்று (11.01.2016) காலை 11.00மணியளவில் காணாமல் போனோரின் உறவினர்கள் வடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டமோன்று இடம்பெற்றது. இதன் போது காணாமல் போணோரின் உறவினர்களினால் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் புகைப்படம் ஏரிக்கப்பட்டது. இதனை வடமாகாண சுகாதார அமைச்சர் உண்ணாவிரதம் இருந்தவர்கள் விசமிகள் என தெரிவித்தமையால் இன்று அமைச்சருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புலம்பெயர் தமிழர்களே காசு கறக்க கனடா வரும் சுத்திய அமைச்சipடம் ஜாக்கிரதை , சம்பந்தன் தீர்வு குழந்தையைப் பெற கஸ்டப்படுகிறார் டாக்குத்தர் நீ போய் வைத்தியம் பார்த்து விடு , செத்த பிணங்கள் எங்களை பார்த்து விசமிகள் என்று கூறுவதா?, ஊழல் விசாரணை கமிட்டியில் ஆஜர் ஆகி முதலில் உண்னை யோக்கியம் என்று நிருபி என பல்வேறு பாதாதைகளை தாக்கிய வண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் விடயம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியோக செயலாளரிடம் தொடர்பு கொண்டபோது,

அமைச்சர் தற்போது வெளிநாட்டிக்கு சென்றுள்ளார் .அவர் மீண்டும் இலங்கை வந்ததன் பின்னர் கருத்து தெரிவிப்பதாக தெரிவித்தார்.

சுமார் ஒருமணித்தியாளங்கள் இவ் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like