வவுனியாவில் வறுமை கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு

வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட 5மாணவர்களுக்கு இன்று (07.06.2017) பிற்பகல் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதிப்பங்களிப்பினூடாக் தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ். சந்திரகுமார் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்களுக்கு பாடசாலை கற்றலை மேற்கொள்வதற்கு துவிச்சக்கரவண்டிகள் 5 வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய செயலாளர் செல்லப்பா இராமச்சந்திரன், திருமதி மஹாலட்சுமி இராமச்சந்திரன், மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ். எஸ். ஸ்ரீனிவாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் இறுதியில் ஸ்ரீ கனகதுர்க்கை ஆலய உறுப்பினர்களுக்கு தமிழ் விருட்சம் அமைப்பினால் கௌரவிப்பு வழங்கிவைக்கப்பட்டது.

You might also like