சீனிக்கு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளதால் தேனீர் விலை அதிகரிக்கலாம்

சீனிக்கு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளதால், சீனியின் விலை அதிகரிக்கும் என்பதுடன் பால் தேனீர் மற்றும் இனிப்பு வகைகளின் விலைகளும் அதிகரிக்கும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனி அத்தியவசிய உணவு பொருளாக மாறியுள்ளது. எனினும் இதற்கு நிலையான விலை இல்லை என அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தாம் விரும்பிய விலையில் சீனியை விற்பனை செய்து வருகின்றனர்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சீனிக்கு 10 ரூபா வரி விதிக்கப்பட்டிருப்பதற்கு இணையாக சீனிக்கு உடனடியாக நிலையான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சரின் இந்த வரி விதிப்பு காரணமாக சீனியை பயன்படுத்துவோர் சிரமங்களுக்கு உள்ளாவர்கள் எனவும் ரஞ்சித் விதானகே கூறியுள்ளார்.

You might also like