வவுனியாவில் அடைக்கப்பட்ட குடி நீர் போத்தலினுள் பிளாஸ்டிக் துண்டுகள்

வவுனியாவில் குடிநீர் போத்தலினுள் பிளாஸ்டிக் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வவுனியா நகரில் விற்பனை நிலையமொன்றில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள குடிநீர் போத்தலினுள் இந்த பிளாஸ்டிக் துண்டுகள் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனை கொள்வனவு செய்த நுகர்வோர் குறித்த நிறுவனத்திற்கு இது தொடர்பில் தொலைபேசி ஊடாக அறிவித்த போது, தன்னை அந்த நிறுவனத்தின் பிரதானியொருவர் திட்டியதாக குறித்த நுகர்வோர் தெரிவித்துள்ளார்.

எனினும் சம்பவம் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்யுமாறு வவுனியா பொது சுகாதார பரிசோதனை அலுவலகம், அந்த நபருக்கு அறிவித்துள்ளது.

இதனுடன் அந்த குடிநீர் போத்தலை விற்பனை செய்த வர்த்தக நிலையம் மற்றும் அந்த குடிநீர் போத்தலையும் முன்னிலைப்படுத்துமாறு அவருக்கு மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like