சற்று முன் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் பதட்டம் : இருவர் வைத்தியசாலையில்

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (08.06.2017) காலை 10.15மணியளவில் தனியார் மற்றும் இ.போ.ச ஊழியர்களுக்கிடையே ஏற்ப்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

முதலாம்குருக்கு வீதியில் நின்ற தனியார் பேரூந்தின் ஊழியர் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்குள் வந்து அங்கு பணியில் இருந்த இ.போ.ச நேரக்கணிப்பாளரிடம் வாக்குவாதப்பட்டார். வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் இ.போ.ச ஊழியரும், தனியார் பேரூந்தின் ஊழியரும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

You might also like