யாழ். குடாநாட்டில் சுழல் காற்று! 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

யாழ். குடாநாட்டில் வீசிய சுழல் காற்று காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொம்மைவெளி மற்றும் புதிய சோனகத் தெரு பகுதிகளில் நேற்று மாலை வீசிய சுழல் காற்று காரணமாக அந்த பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

அத்துடன், காற்றுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாக சாவகச்சேரி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டு கூரைகள் தூக்கி வீசப்பட்டதன் காரணமாக வாகனங்கள் சில சேதமடைந்துள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மின் விநியோகத்தை சீர்செய்யும் நடவடிக்கையில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like