வவுனியாவில் இ.போ.ச ஊழியர் மீது தாக்குதல் : தனியார் பேரூந்தின் ஊழியர் கைது

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (08.06.2017) காலை 10.15மணிக்கு இ.போ.ச நேரக்கணிப்பாளர் மீது தனியார் பேரூந்தின் ஊழியர் தாக்கியதில் இ.போ.சபையின் நேரக்கணிப்பாளர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இச் சம்பவம் தொடர்பில் தனியார் பேரூந்தின் ஊழியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்படவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் புதியதாக அமைக்கப்பட்ட மத்திய பேரூந்து நிலையம் மூடப்படுவதற்கும் இவ்வாறான தனியார் மற்றும் இ.போ.ச ஊழியர்களுக்கிடையே அடிக்கடி ஏற்படும் கைகலப்பே காரணமாகும்.

இவ்வாறான பிரச்சனைகள் எப்போது தீர்க்கப்படும் ? தீர்வு தான் எப்போது?
You might also like