தென்னிலங்கை இளைஞர்கள் மீது கிளிநொச்சியில் வாள்வெட்டுத்தாக்குதல் முயற்சி

கிளிநொச்சி நகர பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்பகுதியிலிருந்து சுற்றுலா வந்த இளைஞர் குழுவினரின் மோட்டார் சைக்கிள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

கிளிநொச்சி நகர பகுதியில் வீழ்ந்து காணப்படும் நீர்த் தாங்கியை பார்வையிடுவதற்காக வருகைத் தந்த குழுவினர் மோட்டார் சைக்கிளை வீதியோரமாக நிறுத்திவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சமயம் அங்குவந்த இனந் தெரியாத நபர்கள் இருவர் தாக்குதலை மேற்கொகொள்ள முயற்சித்துள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் அவர்களது மோட்டர் சைக்கிள்களை அடித்து சேதமாகிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் காரணமாக கிளிநொச்சி நகர் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

கிளிநொச்சி பொலிஸாரின் முதற் கட்ட விசாரணைகளின் போது தாக்குதலை மேற்கொண்டவர் எனும் சந்தேகத்தில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

அத்துடன் குறித்த தாக்குதல் மதுபோதையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like