செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளரை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செட்டிகுளம் பிரதேச செயலாளராக பணியாற்றியவர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உதவி பிரதேச செயலாளரே தற்போது பிரதேச செயலாளராக கடமையாற்றி வருகின்றார்

இந் நிலையில் நீண்ட காலமாக பிரதேச செயலாளர் இன்றி செயற்படும் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு நிரந்தரமாக பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன், அப்பகுதி மக்களின் தேவைகளை பூரணப்படுத்த உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை வவுனியாவில் உள்ள பிரதேச செயலகங்களில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பிரதேச செயலாளரே கடமையற்றி வருகின்ற நிலையில் அவர்களுக்கும் இடமாற்றங்களை வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

You might also like