வவுனியாவில் சுதந்திர பூங்கா திறந்து வைப்பு

வவுனியா ஏ9 வீதி இரட்டைப்பெரிகுளம் பகுதியில் சுதந்திர பூங்கா இன்று (08.06.2017) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பூங்காவை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான செ.மயூரன், ஜெயதிலக்க, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, வவுனியா மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் மற்றும் ஐனாதிபதி காரியாலய அலுவலகர்கள், பொலிஸ் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like