முல்லைத்தீவில் கால் ஒன்றை இழந்த மீனவருக்கு மீன்பிடித்தொழிலின் போது உதவி செய்த சிங்கள மக்கள்

இலங்கையில் ஏற்பட்ட இறுதி யுத்தத்தின் போது படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி தனது ஒரு காலை இழந்த முல்லைத்தீவு மணற்குடியிருப்பைச் சேர்ந்த தவராசா சம்மாட்டியார் என்பவருக்கு இன்று சிங்கள் மக்கள் சிலர் மீன்பிடித் தொழிலின் போது உதவி செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மணற்குடியிருப்பு மீனவர்கள் இன்று பிற்பகல் கரைவலை தொழில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது தனது ஒரு காலை இழந்த நிலையில் தவராசாவும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

அவர்களுடன் களத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வெளியோயா பிரதேசத்தில் இருந்து வருகைதந்த சிங்கள மக்கள் இணைந்து குறித்த மீனவருக்கு உதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like