சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு…!

சிறுநீரக நோயாளிகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மாதாந்தக் கொடுப்பனவுத் தொகை ரூபா 3000 வில் இருந்து ரூபா 5000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேருக்கு தற்போது அரசாங்கத்தினால் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

You might also like