வவுனியா புளியங்குளத்தில் அலுவலர் விடுதி திறந்து வைப்பு

வவுனியா புளியங்குளம் கல்வி வலயத்தில் இன்று 09.06 காலை 10​மணியளவில் அலுவலர்கள் விடுதி வவுனியா வடக்கு கல்வி பணிப்பாளர் வ.ஸ்ரீறீஸ்கந்தராசா தலைமையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராசாவால்  திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அறிவினை மையமாக கொண்டு பாடசாலைக்கல்வியினைப் புனரமைத்தல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கயின் நிதி உதவியுடன் வவுனியா வடக்கு கல்வி வயலத்தில் நீண்டநாள் தேவையாக இருந்த ஊழியர்கள் விடுதியினை வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராசா பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தனராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களாக ஜி; ரி;. லிங்கநாதன், ம. தியாகராசா, செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சுகாதார அமைச்சன் செயலாளர் ச. சத்தியசீலன் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.

You might also like