வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையில் கால்கோள் விழா

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையில் இன்று (11.01.2016) காலை 9.30மணியளவில் கால்கோள் விழா நடைபெற்றது.

சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா அவர்களின் தலமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக உமா இராசையா ( ஒய்வு பெற்ற அதிபர் வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி) , பாடசாலையின் ஆசிரியர்கள் , பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தரம் ஒன்று மாணவர்கள் புதிதாக பாடசாலைக்கு இணைந்த மாணவர்களை பூக்கோத்து கொடுத்து வரவேற்றதுடன் குழுப்பாடல், நடனம் என பல்வேறு கலை நிகழ்வுகள்  இடம்பெற்றன.

You might also like