கிளிநொச்சி வெள்ளங்குளம் பகுதியில் ஆற்றில் வீழ்ந்து பரிதாபமாக பலியான சிறுவன்

சக நண்பர்களுடன் ஆறு ஒன்றைக் கடக்க முற்பட்ட சிறுவன் ஒருவர் ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

தேவன்பிட்டி வெள்ளங்குளம் பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளது.

குறித்த இளைஞர் பின்னர், அந்த பகுதி மக்களால், மீட்கப்பட்டு முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும்,குறித்த சிறுவன் இறந்த நிலையிலையே கிளிநொச்சி வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேவன்பிட்டி வெள்ளங்குளத்தை சேர்ந்த அருள்ஞானம் அருள்விஜிந்தன் ஏழு வயதான சிறுவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் சடலம்,மரண விசாரணை அதிகாரிகளின் பரிசோதனையின் பின்னர் மன்னார் பொலிசாரின் விசாரணைகளுடன் அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பபபபட்டுள்ளது.

You might also like