வடமாகாண சபையின் நிதியொதுக்கீட்டில் விசுவமடுவில் நவீன வசதிகளுடன் கூடிய மலசலகூடம்

வடமாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் மூலம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள விசுவமடு பொதுசந்தை வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூடம் அமைக்கப்படவுள்ளது.

அத்துடன், சந்தை வளாகத்தினுள் கிரவல் மண் இட்டு செப்பனிடும் வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் பாஸ்கரமூர்த்தி சிவபாலராஜா தெரிவித்துள்ளார்.

இதற்காக 1.54 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபையின்நடப்பாண்டுக்குரிய நிதி ஒதுக்கீடான 1.54 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் விசுவமடு பொதுச்சந்தை வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மலசலகூடம் அமைக்கப்படவுள்ளது.

இந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 60 நாட்களுக்குள் முடிவுறுத்தப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

எனவே சந்தை வளாகத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் நடைபெறவுள்ள வேலைகள் தொடர்பில் கண்காணிப்பு செய்வதுடன் வேலைகளில் ஏதும் குறைபாடுகள் காணப்படின் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தனக்கு உடனடியாக அறியத்தருமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like