வவுனியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 10,270 விவசாயிகளுக்கு நிதி உதவி

வவுனியா மாவட்ட கமநலஅபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட எட்டு கமநலசேவைகள் நிலையங்களின் கீழ் கடந்த ஆண்டு காலபோகநெற்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிவழங்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட வரட்சியால் குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து நெற்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் நெற்செய்கை மேற்கொள்ளாதவர்களுக்கே இவ்வாறு உதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 10ஆயிரத்து 270 விவசாயிகளின் 28 ஆயிரத்து 804.225 ஏக்கர் வரட்சி பாதிப்புக்கு 24 கோடியே 91 இலட்சத்து 56 ஆயிரத்து 546 ரூபா பணம் விவசாயிகளின் தனிப்பட்ட வங்கிக்கணக்குகள் ஊடாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்டகமநலஅபிவிருத்தி திணைக்களத்தின்உதவி ஆணையாளர் இராஜரட்ணம் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட 8 கமநல சேவைகள் நிலையங்களின் கீழ் கடந்த ஆண்டு காலபோக நெற்செய்கையை மேற்கொண்ட நிலையில் வரட்சியினால் பயிரழிவிற்குட்பட்ட 6 ஆயிரத்து 154 விவசாயிகளின் 17 ஆயிரத்து 866.25 ஏக்கர் நெற் பயிரழிவிற்கு தலா ஒரு ஏக்கருக்கு 8 ஆயிரத்து650 ரூபா வீதம் மொத்தம் 15 கோடியே 45 இலட்சத்து 43 ஆயிரத்து 63 ரூபா பணம் விவசாயிகளின் தனிப்பட்ட வங்கிக்கணக்கு இலக்கம் ஊடாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வரட்சி காரணமாக நெற்செய்கை மேற்கொள்ள முடியாது போன விவசாயிகளின் நலன்கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இழப்பீட்டை அரசாங்கம் வழங்கியுள்ளது.

இதற்கமைய எட்டு கமநலசேவைகள் நிலையங்களின் கீழ் 4 ஆயிரத்து 116 விவசாயிகளின் 10 ஆயிரத்து 937.975 ஏக்கர் காணிக்கு தலா ஒரு ஏக்கருக்கு 8 ஆயிரத்து 650 ரூபாவீதம் மொத்தம் 9 கோடியே 46 இலட்சத்து 13 ஆயிரத்து 484 ரூபா பணம் விவசாயிகளின் தனிப்பட்ட வங்கிக்கணக்குள் ஊடாக பகிர்ந்தளிக்கப்பட்டுதாக வவுனியா மாவட்டகமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

You might also like