இனங்காணப்படாத சிறுநீரக தொற்றா நோய் 11 மாவட்டங்களுக்கு தீவிர அச்சுறுத்தல்

இனங்காணப்படாத சிறுநீரக நோய் நாட்டில் 11 மாவட்டங்களில் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்தி அவுஸ்திரேலிய ஒத்துழைப்பை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் அவுஸ்திரேலிய ஆய்வுக்குழு இலங்கை வரவுள்ளது.

இனங்காணப்படாத  சிறுநீரகநோய் இலங்கையில் காணப்படும் முக்கிய தொற்றா நோய்களுள்  ஒன்றாகமாறியுள்ளது. 11 மாவட்டங்களிலும் 60 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இந்த நோய் பரவியுள்ளது.

எனவே தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இனங்காணப்படாத சிறுநீரக நோய் தொடர்பில் ஆராய்ச்சி செயற்பாடுகளை ஸ்திரப்படுத்துவது அத்தியவசியமானதாகும்.

இதற்கு அமைவாக அவுஸ்திரேலிய அணு விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம் இந்நோயின் மூலகாரணத்தை கண்டறிவதை நோக்காகக் கொண்ட ஆராய்ச்சிகளில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்வந்துள்ளது.

இதனப்படையில், அவுஸ்திரேலிய ஆய்வு மற்றும் தொழில்நுட்ப குழுவினர் இலங்கைக்கு வருகை தந்து குறித்த மாவட்டங்களில் ஆய்வு நடவடிக்கைளை முன்னெடுக்க உள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அவுஸ்திரேலிய விஜயத்தின் போது அவுஸ்திரேலிய அணு விஞ்ஞான  மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்குமிடையே இனங்காணப்படாத சிறுநீரக தொற்றா நோய் பரவுவியல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like