வவுனியா சமளங்குளம் பாலம் இனந்தேரியாத நபர்களினால் சேதம்

கோவிற்குளம் – சிதம்பரபுரம் பிரதான வீதியில் அமைந்துள்ள சமளங்குளம் பாலம் நேற்று (10.06.2017)  இரவு இனந்தெரியாதநபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

சமனங்குளம் பாலத்தில் கட்டுமானப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றைய தினம் இரவு வேளையில் அவ்விடத்தில் நின்ற இனந்தேரியாத நபர்கள் பாலத்தின் தூண்கள், வீதி சமிச்சை குறியீட்டு பலகை, பாலத்தில் கீழ் மண்ணில் பதிக்கப்பட்ட புற்கள் என்பவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.

அவ்விடத்தில் நேற்று இரவு இளைஞர்கள் நின்று மதுபாவணையில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

You might also like