கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து உயிரை காப்பாற்ற விரைந்த அம்பியூலன்ஸ் விபத்து : ஒருவர் பலி

நோயாளர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற அம்பியூலன்ஸ் வண்டியே விபத்துக்குள்ளாகி உள்ளது.

இன்று அதிகாலை நீர்கொழும்பு, பாலதி சந்திக்கு அருகில் அம்பியூலன்ஸ் வண்டி, மற்றொரு வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது

இந்த விபத்தில் கிளிநொச்சியை சேர்ந்த 44 வயதுடைய யோகரத்னம் ராஜேந்திரன் என்ற நபர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் அம்பியூலன்ஸ் வண்டி கவிழ்ந்துள்ள நிலையில், அதில் பயணித்த வைத்தியர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த மூன்று பேரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் வாகன சாரதி குடிபோதையில் இருந்த நிலையில், அவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

You might also like