கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டு வாழும் மக்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின்பின் மீள்குடியேறிய மக்களுக்கான பல்வேறு வாழ்வாதார உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இவ்வாண்டு மீள்குடியேற்ற அமைச்சினூடாக 813 பயனாளிகளுக்காக மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன் 80 மில்லியன் ரூபா செலவில் குறித்த வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளன.

இவற்றில் கடற்தொழிலை வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு 20 மில்லியன் ரூபா செலவிலான உதவித்திட்டங்களும் விவசாயம் கால்நடை வளர்ப்பு சுயதொழில் முயற்சி உள்ளிட்ட ஏனைய வாழ்வாதார தொழில்களை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு 60 மில்லியன் ரூபா செலவிலான உதவித்திட்டங்களும் வழங்கப்படவுள்ளன.

குறித்த உதவித்திட்டங்களை பெற்றுக்கொள்ளும் 813 பயனாளிகளும் நான்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like