வவுனியாவில் அலுவலக நேரத்தில் மாத்திரம் (காலை9.00 – மாலை5.00) தொடரும் சுகாதார தொண்டர்களின் போராட்டம்

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 04.05.2017  பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக  வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் 38வது நாளாக இன்றும் (10.06.2017) தொடர்கின்றது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென குறிப்பிட்டுள்ளனர்.

இவ் போராட்டமானது தினசரி காலை 9.00மணிமுதல் மாலை 5.00மணி வரை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like