வவுனியா பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம்

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நாளைய தினம் காலை 10.00 மணிக்கு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ம் திகதி நடைபெற்ற நிர்வாக சபைக்கூட்டத்தில் மேற்படி பொதுக் கூட்டம் நடத்துவதற்கான இறுதித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சங்கமானது மிகச் சிறப்பாக இயங்கி வருவதுடன், வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் அபிவிருத்தியிலும் பங்கெடுத்து வருகின்றது.

அந்த வகையில் விளையாட்டுப்போட்டி நிகழ்விற்கு உதவிகளை வழங்கியுள்ளதுடன் பழைய, புதிய மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவி புரிதல், மற்றும் சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கல்லூரியின் புதிய மாணவர்களை இணைப்பதில் கல்லூரி நிர்வாகத்திற்கு உதவியினை செய்து வருவதுடன் மேலும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளையும் திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களின் மேல் கற்கை நெறிகளுக்கான உதவிகளை வழங்குவதோடு, தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிர்வாக சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் கடந்த 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி காலை 11.00 மணிக்கு வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like