வவுனியாவில் தெற்கில் வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வழிபாடு

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக இவ்அனர்த்தத்தினால் எம்மைவிட்டு பிரிந்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டியும், இழப்புக்களினாலும், இடம்பெயர்வாலும் அல்லலுறும் உறவுகளின் மேம்பாட்டிற்காகவும் வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் இன்று 12.06.2017 காலை 7.30மணியளவில் ஆத்மா சாந்தி வழிபாடு  இடம்பெற்றது

ஜனாதிபதி செயலகத்தின் நெறியாள்கையில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் வவுனியா மாவட்டசெயலகத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட பொது அமைப்புகள், பொதுமக்களின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இவ் ஆத்மா சாந்தி பிராத்தனையில்,

வடமாகாண  சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. றோஹண புஸ்பகுமார, மேலதி அரசாங்க அதிபர் திரு. த. திரேஸ்குமார், வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் திரு. ரி. கே. இராஜலிங்கம், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு. இ. நித்தியானந்தன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ். வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு. சந்திரகுமார், செயலாளர் திரு. மாணிக்கம் ஜெகன், மற்றும் வர்த்தக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி விளக்கேற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

இதன் போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால்  ஸ்ரீ கந்தசாமி ஆலய நிர்வாகத்தினருக்கு அன்பளிப்பு பொருள் ஒன்றும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like