வவுனியாவிலிருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு விசேட பேருந்துச் சேவை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று(12.06.2017) திங்கட்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த பொங்கல் விழாவிற்குச் செல்லும் அடியார்களின் நன்மைகருதி விசேட போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியாவிலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு 10நிமிடத்திற்கு ஒரு இ.போ.சபை பேரூந்துகளும் 20நிமிடத்திற்கு ஒரு தனியார் போக்குவரத்து பேரூந்துகளும் சேவையில் ஈடுபடுகின்றன. இச் சேவையானது இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது

இ.போ.சபையின் பேரூந்து பயண நேரம் மற்றும் முறைப்பாடுகள் எதும் இருப்பின் 024 2223481 எனும் இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு இ.போ.சபையின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like