வவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம் அனுஸ்டிப்பு

இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக ஜீன் மாதம் 10ம் திகமி முதல் 16ம் திகதி வரை நாடு முழுவதும் தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

அந்த வகையில் இன்றையதினம் (12.06.2017) வவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. றோஹண புஸ்பகுமார அவர்களின் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  மேலதிக அரசாங்க அதிபர் திரு. த. திரேஸ்குமார், வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் திரு. ரி. கே. இராஜலிங்கம், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ். வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு. சந்திரகுமார் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் வர்த்தக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் கொடி அணிவித்து வைக்கப்பட்டதுடன் வர்த்தகர்களும் இந்து சமய அறநெறிக்கல்விக்காக நன்கொடைகளை வழங்கி வைத்தனர்

இதன் மூலம் சேகரிக்கப்படும் நிதிகள் பின்தங்கிய அறநெறி பாடசாலை மாணவர்களின் கற்றல் தேவைகள் , உடைகள் , அறநெறி பாடசாலைகள்  புனரமைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன

 

You might also like