வேளாண்மைத்துறை வடமாகாண பிராந்திய அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது!!

வேளாண்மைத்துறை நவீன மயமாக்கல் திட்டம் மற்றும் விவசாய அபிவிருத்தி திட்டத்தின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலகம் வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் இன்று (12-06) ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் நவீன விசவசாய கைத்தொழில் அமைச்சின் பிராந்திய முகாமையாளர் றோகண கமகே தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு வருகை தந்திருந்த ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் வடக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் பிரதான பெயர்ப்பலகை மற்றும் அலுவலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.

மத குருக்களின் சமய அனுஸ்டானங்களின் பின் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் மங்கள விளக்கேற்றி அலுவலகத்தின் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பந்துல விக்கிரம ஆராச்சி, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார, வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் க.உதயராசா, ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எம்.கருணாதாச மற்றும் இராணுவ அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like