கிளிநொச்சியில் வறட்சி தணிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் குடிநீர் தாங்கிகளும், பவுசர்களும் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் வறட்சி தணிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் குடிநீர் தாங்கிகளும், பவுசர்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக பல பகுதிகளிலும் குடிநீருக்கான தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன.

குறிப்பாக கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பொன்னகர் கோணாவில், மாலையாளபுரம், சாந்தபுரம், ஆகிய பகுதிகளிலும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் பதினொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் கல்லாறு தட்டுவன்கொட்டி ஆகிய பகுதிகளிலும் வருடம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இவ்வாறான பிரதேசங்களுக்கு பிரதேச சபைகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாகவும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நிலவும் வறட்சி காரணமாக அனர்த்த முகாமைத்து அமைச்சினூடாக வறட்சி தணிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு எட்டு உழவு இயந்திர பவுசர்களும், குடிநீர் தாங்கிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும், கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like