கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் 279 மலசல கூடங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் கீழ் 279 மலசல கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளில் மீள்குடியேறிய மக்களின் சுகாதார நலன்களை கருத்திற்கொண்டு மலசலகூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், இதற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 230 பயனாளிகளுக்கு தலா 55 ஆயிரம் ரூபா பெறுமதியான மலசலகூடங்களும் அதே போன்று தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான 49 மலசல கூடங்களும் என 279 மலசல கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன

You might also like