இலங்கையர்களை பதற வைத்த மர்ம தொலைபேசி அழைப்புகள்! விசாரணைகள் தீவிரம்

இலங்கையிலுள்ள தொலைபேசி பாவனையாளர்கள் பலரையும் பதற வைக்கும் வகையில் நேற்றைய தினம் வந்த மர்ம அழைப்புகள் குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து இரண்டு வெவ்வேறான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, தொலைத்தொடர்பு ஆணைக்குழு மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இது குறித்த மோசடியின் பின்னணியில் இருப்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் இலங்கையர்கள் பலருக்கும் இவ்வாறான மர்ம அலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாகவும், அந்த அழைப்புகளை தொடர்பு கொள்வதற்கு முன்னர் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சிலர் அந்த இலக்கங்களுக்கு மீள் அழைப்புகளை மேற்கொண்ட போதிலும் யாரும் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அழைப்புகளை ஏற்படுத்தியமைக்காக மிகவும் அதிகமான கட்டணம் அறவிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like