தடுப்பூசி விஷமானதால் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தாய்

தடுப்பூசி விஷமானதால் இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்த சம்பவம் குருணாகலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குருணாகலை, ஹிரிபிட்டி கிராம வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட நிலையில், தடுப்பூசி விஷமானதால் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாந்தி மற்றும் தொண்டையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சைகளுக்காக குறித்த கிராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் பின்னரே,அவர் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அந்த தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் அந்த பெண் குருணாகலை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டமையினால் அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினரின் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

You might also like