வவுனியாவில் பாக்குவெட்டி பிள்ளையை கற்பிக்கும் தாயின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள்

பாக்குவெட்டி பிள்ளைக்கற்பிக்கும் தாயின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
மாவட்ட சமூக சேவை அலுவலகம் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளியான திருமதி.கமலாதேவி பாக்குவெட்டி வியாபாரம் செய்பவர்.

இவரது 03 பிள்ளைகள் கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர். இவர்களின் மூத்த மகளிற்கான துவிச்சக்கர வண்டி அண்மையில் வீ -3 அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.

ஏனைய இரண்டு பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று 12.06.2017 திங்கட்கிழமை புன்னகை அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. ஆறாம் ஆண்டில் கல்வி பயிலும் செல்வி. வ.கம்சிதா, இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் வ.நிந்துசன் ஆகியோருக்கே இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு.செ.ஸ்ரீநிவாசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே..வசந்தன் புன்னகை அமைப்பின் தலைவர் க.சர்மிலன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சவுதியில் இருந்து நோயுடன் திரும்பிவந்த பெண்ணுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு
வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்திற்கு அருகில் வசிக்கும் தேவராஜா விஜயவாணி என்பவருக்கு சக்கரநாற்காலி ஒன்று இன்று வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தின் ஊடாக வவுனியா அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று இவருக்கு இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.

கணவனால் கைவிடப்பட்ட இப்பெண்மணி வாழ்வாதாரத்திற்காக சவுதிஅரேபியா சென்ற வேளை அங்கு சிக்குன் குனியா நோய்த்தாக்கத்திற்குட்பட்டு இனம் புரியாத கால் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். எந்தவித உதவியுமின்றி நாடு திரும்பிய இவருக்கு கால் பாதத்தில் இரண்டு முறை சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது தொடர்ந்து சத்திர சிகிச்சைக்கு உட்பட்டு வருவதனால் இன்று 12.06.2017 திங்கட்கிழமை சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. இன்று இவரது இல்லத்தில் வைத்து சக்கர நாற்காலி வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு.செ.ஸ்ரீநிவாசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே..வசந்தன் புன்னகை அமைப்பின் தலைவர் க.சர்மிலன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

You might also like