வாகனத்தை பந்தாடிய காட்டுயானை! நொடிப்பொழுதில் உயிர் தப்பிய பெண்

வாகனத்தில் பயணித்த பெண்ணொருவரை காட்டு யானை விரட்டிய சம்பவம் அனுராதபுரத்தில் பதிவாகியுள்ளது.

அனுராதபுரம் பாதெனய வீதியின் தலாவ மயானத்திற்கு அருகில் பயணித்த பெண்ணின் வாகனம் ஒன்றை யானை சேதப்படுத்தியுள்ளது.

இன்று காலை யானை ஒன்று பாதையை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

அனுராதபுரத்திலிருந்து குருணாகலை நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

மோட்டார் வாகனத்தில் யானை மோதுண்டதனை தொடர்ந்து மோட்டார் வாகனத்தை யானை தலை கீழாக திருப்பியுள்ளது.

இதனால் அச்சமடைந்த யானை காட்டிற்கு தப்பியோடியுள்ளது. இந்த சம்பவத்தில் யானைக்கு காயம் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவரும் ஆபத்து எதுவும் இன்றி நொடியில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like