பத்து தினங்களாக கதிர்காம பாதயாத்திரையில் பயணிக்கும் நாய்!

கதிர்காமம் முருகன் பருவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். சந்நிதி ஆலயத்திலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டுள்ள குழுவினருடன் நாய் ஒன்றும் பயணிக்கின்றது.

கடந்த பத்து தினங்களாக குறித்த நாய் யாத்திரிகளுடன் பயணிக்கின்றது. இந்நிலையில், குறித்த நாய்க்கு பக்தர்கள் திலகமிட்டு, பட்டு சாத்தியுள்ளனர்.

குறித்த நாய் இடைநடுவில் திரும்பி சென்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது தொடர்ந்து முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம் வரையில் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like